துணைவியின் பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
வள்ளுவன் குரல் கேட்டு வாவிக் கயிற்றை விட்டு வந்த வாசுகி அல்ல இதயப் புத்தகத்தின் வாசகங்களுக்கு வசமான வாசகி அவள் ராமன் காலடி பற்றி கானகத்தில் அயோத்தி கண்ட சீதை அல்ல வாழ்க்கைத் தேரினில் சாரதியாய் அமர்ந்து வழிகாட்டிய கீதை அவள் கோவலனைக் காவலன் கொல்ல மதுரையை எரித்த கண்ணகி அல்ல காலத்தின் கோலத்தில் துன்பத்தை எரித்து இன்பத்தைக் காட்டிய கண்மணி அவள் பாமாலையும் பூமாலையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அல்ல பாச மகுடம் சூடி பண்புச் செங்கோல் ஏந்தி என் நெஞ்சத்தை ஆண்டாள் அவள் சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்ற எதையும் மறக்காமல் அன்றைய நிகழ்வுகளின் நினைவுகளோடு ஶ்ரீராமன் துணையோடு சீரோடு வாழ்க சிறப்போடு வாழ்க பேரோடு வாழ்க புகழோடு வாழ்க இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்