இறையருள்


இறையருள் என்பது இனிதானதொன்று 

இறையருள் என்பது இதமானதுமன்றோ 


இறையருள் பெறவே 

இமய வலம் வேண்டாம்


இறைஞ்சி உருகும்

இதய வளம் போதுமே


பணத்தால் பக்தியை அளப்பது மனித குணம் 

மனத்தால் அருளை அளிப்பது இறைவன் குணம்


பூசலார் நாயனார்

மனக்கோவில் பூசனைகள் ஏற்றவன் இறைவன்



படித்தால் மட்டும் படுவது அல்ல பரம்பொருள் 

படிந்து வணங்கிட படிவது பரமன் அருள்


வரம் தரும் அருளோ  வரம்பற்றது

வரவு செலவு கணக்கோ அவன் அறியாதது


புண்ணியம் என்பது பண்ணிய வினையின் விளைவேயாம்

பங்களிப்பை பொறுத்து  பகிர்ந்தளிக்கப் படுவதில்லை 


சங்கு உண்டு சக்கரம் கதையும் உண்டு

பொங்கும் இசைக் குழலும்  உண்டு கோபாலன் கரங்களிலே


சிங்க முகமும் உண்டு சீறிய விழியும் உண்டு

எங்கும் காணவில்லை எடைக்கல்லும் துலாமும்


ஆன்மீகத்தில் இப் படி  அப் படி 

காண்பது எப்படி அது தப்படி


சான்றோர் உரைப்படி நடப்பது முதற்படி

நான் எனது ஒழிய முதற்படி 

முதிர்ந்துவிடும் முற்றுப்படி யாகிவிடும்


எளிமையாக வணங்குவோம் 

முழுமையாக வணங்குவோம்


கடந்தது கடந்ததாக இருக்கட்டும்

நடப்பது நல்லதாக நடக்கட்டும்


கடந்த கால கசப்புகள் 

வருங்கால  வசந்தங்களாகட்டும்


இறையருள் இனிதானது 

இறை அருள் இதமானது

Comments

  1. மிகவும் இனிமையான தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு வடித்த கவிதா அருமை. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..அன்பு கலந்த உங்கள் வார்த்தைகள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன..மீண்டும் நன்றி

      Delete
  2. Sooper kavidhai. Ungalukkum iniya puthandu nal vazhthukkal. Vazhga valamudan

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி

      Delete
  4. ஈடில்லாப் பரம் பொருளைப் பற்றிய இணையில்லாக் கவிதை .....அருமை

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் சாரத்தை உணர்ந்து ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

      Delete
  5. கவிதை வெகு நேர்த்தி. பாசம் மிகு பகவானின் பதத்தை சொன்ன விதம் ரொம்ப அருமை.நா

    ReplyDelete
  6. நன்றி நாகராஜன்...உங்கள் பாராட்டு ஊக்கம் தருகிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பனி நிலவில் பாரதத் தேர்

சமுதாயம் புதிய பார்வை பெறட்டும்