பனி நிலவில் பாரதத் தேர்

நிலைத்து நிறுத்தி நிலவின் மண்ணைத் தொட்டு நின்றது விக்ரம் 

அலையாக அசைந்து
இறகாக  இலகுவாக இறங்கி வென்றது

சிலிர்த்து சீறிப் பாய்ந்த சிங்கம்  
மதியின் அழகில் மதி மயங்கி
சிறு குழந்தை போல் 
முத்தமிட்டதோ...

பனி தரும் நிலவின் வீதியில்
பவனி வரும் பாரதத் தேர்

வேண்டுதல்கள் விண்ணைத் தொட்டன
வேத முழக்கங்கள் விண்ணைத் தொட்டன
விக்ரமும் விண்ணைத் தொட்டது
விண்ணைத் தொடும் சாதனை என்பார் 
அது இதுதானோ 

மந்திரம் போல் பறந்து மறைந்து
சந்திரனில் அடைக்கலம் புகுந்த மரக்கலமே 

சாதனைகள் சோதனையில்தான் தொடங்குகின்றன
சென்ற முறை நின்றுபோனது
இந்த முறை நின்று வென்றது

விதியை மதியால் வெல்லலாம் என்பர்
இன்று மதியை மதியால் வென்றுவிட்டனர்

விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்து கொள்ள
வெற்றிக்கனியை தட்டிப் பறித்த விஞ்ஞானிகளுக்கு
வீர வணக்கம்

வானவெளியில் ஒரு வீதி பிறந்தது
விந்தைகளுக்கு புது கதவு திறந்தது

விசை பெருகட்டும்
வெற்றிகள் தொடரட்டும்
வியப்புகள் குவியட்டும்
மாயோன் அருளாலே
பல மாயங்கள் விலகட்டும்..

வாழ்க பாரதம்
வாழ்க வையகம்

Comments

  1. அருமையான கவிதை. அடுக்குமொழியும் எதுகை மோனையும் நிரம்பி வழியும் இதை வடித்த கவிஞர் சந்திரசேகரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏

    ReplyDelete
  2. Sooper 🎉🎉🎉

    ReplyDelete
  3. Very well written 👍

    ReplyDelete

  4. தேர்ந்தெடுத்த தேன் சொற்கள்
    தொகுத்து வரைந்த கவிதை
    ஒவ்வொரு வரியும் கவிதை
    மொத்தமும் கவிதை முத்தான கவிதை
    நிலவைத் தொட்ட நின் கவிதை

    வாழ்க வளர்க அழகு அழகாய்
    தமிழ் கவிதை அள்ளித் தருக

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள் பல

      Delete
  5. வலைப்பூவில் முதன்முறையாய் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதை அருமை

    ReplyDelete
  6. Nagarajan SubramanianSeptember 4, 2023 at 7:08 AM

    Kavithai Arumayo Arumai. Nilavai Kan munney kondu vanthu niruthiyathai pol irunthathu. Vazhukkal pala . Nar kavithaigal thodarattum.

    ReplyDelete
  7. Super super super 👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறையருள்

தை பிறந்தது