வழிகாட்டிகளுக்கு வந்தனம்

எண்ண ஓட்டத்தில் அறுபது ஆண்டுகளுக்கு

முன்னம் ஓர் நாள் முதல்நிலை பள்ளிதனில்


அன்னை உருவில் ஆசிரியை மங்கம்மா

உண்ண உணவையும் கல்வியுடன் சேர்த்து

ஊட்டிய உவகை

இன்னும் முகம் தெரிகிறது

இதயமெல்லாம் இனிக்கிறது


மல்லிகை பூ போன்ற வெள்ளை நிற சட்டை

அள்ளி அள்ளித் தந்தார் அறிவுப் புனலை

நல்லிதயம் கொண்ட

நான்காம் வகுப்பாசிரியர்

மல்லிகார்ஜுன வாத்தியார்


அறிவும் அதிகம்

ஆட்டமும் அதிகம்

ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் ராமராஜ்

அன்போடு அளித்த

அத்தாட்சி பத்திரம்


கணக்குப் பாடத்தை எனக்குப் புரியவைக்க

தனக்கு முடிந்தவரை

இணக்கமாக பயிற்றுவித்து

தரையில் அமர வைத்து தலையில் ஏற்றி விட்ட

கரை பல கண்ட

கப்பல் போன்ற

கணித ஆசிரியர்

மைக்கேல்ராஜ்


அஞ்ஞானம் அகல மெய்ஞானம் தேவை

அண்டத்தின் அதிசயம் தெரிய

அறிவியல் அறிவு தேவை

விஞ்ஞானத்தின் விந்தைகளை

விரித்து உரைத்த வின்சென்ட் ஆசிரியர்


உயிரியலை உரித்துத் தந்த ஜெயராமன்

பொருளாதாரத் தத்துவங்களை

பொருள் ஆதாரங்களுடன்

புரிய வைத்த வரதராஜன்


தமிழை ரசித்துப் புசிக்க வைக்க

தமிழ் கடவுள் என வந்த ஆசிரியர் பண்டித மீ கந்தசாமி புலவர்


கருணையும் கண்ணியமும்

நிறைந்த ஆசிரியர் கணேச ஐயர்



நினைக்க நினைக்க நிறைவு தரும்

பட்டியல் அது

நிறைவே இல்லாத நீண்ட பட்டியல் அது


ஆசிரியர்களைப் போற்றிப் பாடவே

யாப்பிலக்கணத்தில் ஆசிரியப்பா என்றே இருக்கிறதோ


நேர்மையாக இருப்பதினாலே

நேரொன்றாசிரியத் தளைகளும்


நிறைவாக இருப்பதினாலே

நிரையொன்றாசிரியத்

தளைகளும்

நிறைந்து இருக்கின்றனவோ...

இந்த நிறைவான நினைவு மலர்கள்தான்

ஆசிரிய குலத்திற்கே

அர்ப்பணம் சமர்ப்பணம்


இரா. சந்திரசேகரன் 

Comments

  1. படிக்கப் படிக்க நானும் பள்ளி நினைவுகளில் மூழ்குகிறேன் சார். கவிதைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..
      திரு.குமார்.. நீங்கள் தந்த ஊக்கம் தான் காரணம்...🙏

      Delete
  2. Very Lovely Tribute to all Teachers 👌👍👍👍

    ReplyDelete
  3. Wonderful poem for teacher's day ❤️👌👍 Enjoyed reading and reminiscing about my school days 💕

    ReplyDelete
  4. Sooper kavithai 👍👌

    ReplyDelete
  5. Kavithai miga arumai...aasiriyargalukku poruththamaana matiyaadhai

    ReplyDelete
  6. Super .. brother.. perfect tribute to the great teachers ...matha pitha guru deivam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறையருள்

தை பிறந்தது

பனி நிலவில் பாரதத் தேர்