காதல் வாழ்க
நீலத்துகில் மேவும் குளிர்த்தடாகம் அவன்
நீண்டு மணக்கும்
நல்ல தாமரை அவள்
விரிந்த இரவின் பரந்த
வானம் அவன்
வரைந்த அழகுச் சித்திர
நிலவு அவள்
பஞ்சென மிதக்கும்
பனிமேகம் அவன்
பளிச்சென ஒளிரும்
படர் மின்னல் அவள்
தென்திசை தவழும்
தென்றல் அவன்
தித்திக்கும் தீந்தமிழின்
இசை அவள்
கரைகளைக் காணாக்
கடல் அவன்
கலையென புரளும்
அலை அவள்
கண்ணிரண்டு
காண்பது ஒன்றேயென
உடல் இரண்டு
உணர்வு ஒன்றேயாகி
இருவரும் இரண்டல்ல
ஒன்றே என்றே
இறைவன் அருள் மழை
பொழிய
ஈன்றவர் அன்பு மழை பொழிய
தந்தையின் பாராட்டும்
தாயின் சீராட்டும் கலந்த
காதல் வாழ்க...
உண்மைக் காதல் வாழ்க....
ReplyForward |
சொற்களை தேர்ந்தெடுத்து கவிதையை வடித்திருக்கும் விதம் அற்புதம் சார்.பாராட்டுக்கள்
ReplyDeleteஆகா...! அருமை...
ReplyDelete