தை பிறந்தது
தை பிறந்தது
நடந்ததை மறந்திரு
தை பிறந்தது
நடப்பதை நினைத்திரு
தை பிறந்தது
வருவதை அழைத்திரு
இறைவனவன்
தருவதைக் களித்திரு
உள்ளத்தை உயர்த்திடு
உயர்ந்ததை உணர்ந்திரு
உணர்ந்ததை பகிர்ந்திரு
பகிர்ந்ததை உவந்திரு
வஞ்சத்தை வடித்திரு
நெஞ்சத்தை நிமிர்த்திடு
நல்லதை இணைந்திரு
அல்லதைப் பிரிந்திரு
சொல்லதைச் சுவைத்திரு
பொருளதைப் புரிந்திரு
தேசத்தை நேசித்திரு
மொழியைப் பூசித்திரு
திருவெலாம் சேரட்டும்
தைத்திருநாளில் கூடட்டும்
புதிய தை புதியதை கொடுக்கட்டும்
இனிய தை இனியதைக் கொடுக்கட்டும்
திருநாளில் அற்புத தை சுவை தேன். அருமை சார். மனம் நிறைந்த பாராட்டுக்கள்
ReplyDeleteThai pirandathu...kavithai piranthathu...arumai...
ReplyDeleteமிக்க நன்றி குமார் அவர்களே தங்களது உடனடியான பதிவு மகிழ்வைத் தருகிறது... உற்சாகத்தைத் தருகிறது
ReplyDeleteபொங்கல் கவிதை
ReplyDeleteவந்தது,
அது நம் மனத்தைத்
தொட்டது,
புது நம்பிக்கை
பிறந்தது,
மதுரை சேகரின்
கவித்துவம் புரிந்தது.
அது வாழும் முறையைப்
பகர்ந்தது,
வாழ்வியலைச்
சொன்னது,
அதுவும் விளக்கமாகச்
சொன்னது,
நம்மைக் கடைபிடிக்கச்
சொன்னது.
மதுரை சேகருக்கு நன்றி நன்றி நன்றி.
பி வி வைத்தியலிங்கம்
மிக்க நன்றி வைத்தியலிங்கம் அவர்களே. நீங்கள் எவ்வளவு ரசித்தீர்கள் என்பதை கவிதையாக வந்த தங்களது பாராட்டு தெரிவிக்கிறது மீண்டும் நன்றி
Deleteதை தை தை
ReplyDeleteஎன்ற சொல்லாடேலோடு
கவி நடனம் புரிவது
அழகு.
புதிய தை புதியதைக் கொடுக்கட்டும்
இனிய தை இனியதைக் கொடுக்கட்டும் - கவித்துவம் மிளிர நிறைவு இனிது.
அனுராதா
நன்றி முனைவர் அனுராதா அவர்களே....தங்கள் பாராட்டு என்றுமே ஒரு உற்சாகத்தைத் தந்துவிடும்....இம்முறையும்..
ReplyDelete