Posts

Showing posts from September, 2023

காதல் வாழ்க

Image
  நீலத்துகில் மேவும் குளிர்த்தடாகம் அவன் நீண்டு  மணக்கும்  நல்ல தாமரை அவள் விரிந்த இரவின் பரந்த வானம் அவன் வரைந்த அழகுச் சித்திர நிலவு அவள் பஞ்சென மிதக்கும்  பனிமேகம் அவன் பளிச்சென ஒளிரும் படர் மின்னல் அவள் தென்திசை தவழும் தென்றல் அவன் தித்திக்கும் தீந்தமிழின் இசை அவள் கரைகளைக் காணாக்  கடல் அவன் கலையென புரளும் அலை அவள் கண்ணிரண்டு காண்பது ஒன்றேயென உடல் இரண்டு உணர்வு ஒன்றேயாகி இருவரும் இரண்டல்ல ஒன்றே என்றே இறைவன் அருள் மழை பொழிய ஈன்றவர் அன்பு மழை பொழிய தந்தையின் பாராட்டும் தாயின் சீராட்டும் கலந்த காதல் வாழ்க... உண்மைக் காதல் வாழ்க.... Reply Forward

சமுதாயம் புதிய பார்வை பெறட்டும்

Image
  கண்கள் திறந்தன காட்சிகள் விரிந்தன மங்கலாகத் தெரிந்த தூரத்துப் பச்சை மங்களம் மிகுந்து தெளிவாய் மிளிர்கிறதே எங்கும் ஒளி எதிலும் பளிச்சென பொங்கும் அழகு பூத்து ஒளிர்கிறதே பூமி புதிதாகப் பிறந்துவிட்டதா   சூரியன் மறைய மறந்துவிட்டதா ஓ..புதிய பார்வை கிடைத்துவிட்டதோ... கண்ணிமை கருவிழி காத்து நிற்கும் விழிவில்லை விழிவில்லை ஒளிமங்க முதுமை தரும் கருந்திரை  விஞ்ஞான வியப்புமிகு செரிவுநிறை சீரொளி விரைந்து இயங்கி புரைகரைக்கும் ஊடொளி புதிய பார்வை தந்துவிடும் புத்துலகைக் காட்டிவிடும் கண்ணில் விழுந்த புரைதனை போக்கிடலாம் மண்ணில் விழுந்த புரைகளை என் செய்வோம் போற்றத்தகு பெண்மையை தூற்றிவிடும் துயரம் பெண் சக்தி பேசிவிட்டு வன்புத்தியே தொடரும் அரசியலில் ஆதாயமட்டுமே தேடி நிற்கும் அவலம் ஆட்சியில் மாட்சியென்பது  வெறும் காட்சியான மடமை கல்விக்கு விலைவைத்து கலைகளைக் கொலை செய்து கலாச்சாரத்தைக் காலால் மிதிக்கும் கொடுமை கருப்பப்பணம் கள்ளச்சந்தை கலக்கம் தரும் கயமை நாகரீக மோக மது தடுமாறும் தலைமுறை நல்லியல்பு தெய்வீகம் நலிந்துவரும் நடைமுறை எத்தனை புரைகள் இந்த சமுதாயத்தில் என்று புரியும் என்று விடியும் இறைவா.... விஞ்ஞான ச

வழிகாட்டிகளுக்கு வந்தனம்

பனி நிலவில் பாரதத் தேர்

நிலைத்து நிறுத்தி நிலவின்  மண்ணைத் தொட்டு நின்றது விக்ரம்  அலையாக அசைந்து இறகாக  இலகுவாக இறங்கி வென்றது சிலிர்த்து சீறிப் பாய்ந்த சிங்கம்   மதியின் அழகில் மதி மயங்கி சிறு குழந்தை போல்  முத்தமிட்டதோ... பனி தரும் நிலவின் வீதியில் பவனி வரும் பாரதத் தேர் வேண்டுதல்கள் விண்ணைத் தொட்டன வேத முழக்கங்கள் விண்ணைத் தொட்டன விக்ரமும் விண்ணைத் தொட்டது விண்ணைத் தொடும் சாதனை என்பார்  அது இதுதானோ  மந்திரம் போல் பறந்து மறைந்து சந்திரனில் அடைக்கலம் புகுந்த மரக்கலமே  சாதனைகள் சோதனையில்தான் தொடங்குகின்றன சென்ற முறை நின்றுபோனது இந்த முறை நின்று வென்றது விதியை மதியால் வெல்லலாம் என்பர் இன்று மதியை மதியால் வென்றுவிட்டனர் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்து கொள்ள வெற்றிக்கனியை தட்டிப் பறித்த விஞ்ஞானிகளுக்கு வீர வணக்கம் வானவெளியில் ஒரு வீதி பிறந்தது விந்தைகளுக்கு புது கதவு திறந்தது விசை பெருகட்டும் வெற்றிகள் தொடரட்டும் வியப்புகள் குவியட்டும் மாயோன் அருளாலே பல மாயங்கள் விலகட்டும்.. வாழ்க பாரதம் வாழ்க வையகம்