பெண்மையை போற்றிடுவோம்


பெண்களே..

உங்கள் வதனத்தின் அமைதி

புவனத்தின் இரைச்சலைக் 

கரைத்திடுமே 


இளநங்கையின் 

சிறு புன்னகை

இதயத்துப் புயலையும் மறைத்திடுமே


பாவையின் இருவிழி அசைவு

பாரினில் இயக்கத்தை நிறுத்திடுமே


உங்கள் இமைகளின் துடிப்பு

இமயத்தையும் உருக்கிடுமே 


மங்கை உங்கள்

எண்ணத்தின் மேன்மை

எழும்  கொடுமைகளை

நொறுக்கிடுமே 


முப்பத்து மூன்று விழுக்காடு 

முதல் மரியாதைக்கு

இல்லை ஈடு



மூவுலகும் போற்றும் வண்ணம்

மூவேந்தர் போல்  ஆள்வது திண்ணம் 

நீங்கள் சாதிக்க வந்து விட்டீர்கள் 

இனி சாதனைகள் தோற்றுவிடுமே


நீங்கள் விதி செய்ய வந்துவிட்டீர்கள் 

இனி விந்தை பல தோன்றிடுமே


உங்கள் சக்தியை அறிந்து கொண்டால்

இந்த செகமெல்லாம்

இணைந்து மகிழ்ந்திடுமே


பெண்மையைப் போற்றிடுவோம்

பெரும் சக்தியைப் போற்றிடுவோம்


உண்மையை சாற்றிடுவோம்

உலக சோதியை ஏற்றிடுவோம்


வாழ்க பாரதம்..

Comments

Post a Comment