எது சர்க்கரை பொங்கல்

 *எது சர்க்கரைப் பொங்கல்* 


விந்தைகள் நிறைந்த எந்திரம் இறைவன் கொடுத்த இதயம் 


வஞ்சகம் இல்லா நெஞ்சகம் அதுவே சிறந்த அடிசில்


கள்ளமில்லா வெள்ளை உள்ள அன்பே செறிந்த பாலாகும் 


அக்கறை நிறைந்த தூய எண்ணங்களே சர்க்கரை ஆகும் 


நம்பிக்கை மிகுந்த பக்தியே நறுமணம் கமழும் நெய்யாகும்


மெய்யை பொய் என உணர்ந்த மெய்ஞானமே நெருப்பாகும்


இதயத்து ஆலையில்

நெஞ்சத்து அடிசிலோடு

அன்புப் பால் சொரிந்து

நல்ல எண்ண

சர்க்கரை கரைத்து

பக்திநெய் கலந்து

ஞானத் தீயில் சமைத்து விட்டால் கிடைத்திடுமே 


முக்தி என்னும் சர்க்கரை பொங்கலே

Comments

  1. இப்படியும் ஒரு வித்தியாசமான பொங்கல். அருமை சார்

    ReplyDelete
  2. Super... pongal inikirathu

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

இறையருள்

பனி நிலவில் பாரதத் தேர்